இயற்கையின் நீதி நல்மருந்துகள் : எந்த இடத்தில் மனிதன் ஐவகைப் பற்றுக்களால் அறிவு குறுகி, மயங்கி, தன் பிறவி நோக்கத்தையும் வாழ்வின் நெறியையும் மறக்கின்றானோ அதே நேரத்தில் மனிதனிடம் அமைந்துள்ள அடித்தள அறிவாற்றலாகிய பேரறிவு, குறுகி நிற்கும் புற அறிவை நேரான வழிக்கு திசை திருப்புகிறது. அப்போது விருப்பங்கள், செயல்கள் இவற்றில் தடைகள் விளைந்து வாழ்வில் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே துன்பமாக, சிக்கலாக, கருத்துப் பிணக்காக பெற்று புறமனம் குழப்பமடைகின்றது. இத்துன்பங்களிலிருந்து புறமனத்தை மீட்க பேரறிவு, விரிந்த இயற்கை ஆற்றல் மூலமாகவும், மனிதர் மூலமாகவும் உதவிக் கொண்டே தான் இருக்கும். இந்த நிலையிலேனும் புறமன இயக்கத்திலேயே குறுகியுள்ள மனிதன் அவன் வாழ்வின் இயக்க களமான அருட்பேராற்றலை நினைவு கொள்ள வேண்டும். பேரறிவின் நிலைக்கு, அந்நினைவு அழைத்துச் சென்று ஒன்ற வைத்துவிடும். இந்த வகையில் பேரறிவில் புறமனம் தொய்வு பெறும் மனித முயற்சியே யோகம் எனப்படுகிறது. எனவே வாழ்வின் சிக்கல்களும் துன்பங்களும் பிறவியின் நோக்கத்திற்கு முரண்பட்ட செயல்களின் விளைவுகளேயாகும். அவை திசைமாறி நிற்கும் புற மனத்தை ஒழுங்குபடுத்தப் பேரறிவு அளிக்கும் நல் மருந்துகளே (டிவினெ ட்ரெஅட்மென்ட்ஸ்) யாகும். இயற்கையின் இத்தகைய ஒழுங்கமைப்பை உணர்ந்து, அதனால் விளைந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு திருத்தம் பெற மனிதன் முயன்றால் உய்வு நிச்சயம். யோகப் பயிற்சியின் மூலமான மனிதன் பேரறிவாக, விழிப்போடு இயங்கவும், வாழ்க்கையில் சிக்கல்கள், துன்பங்கள் விளையாமல் காக்கவும், வந்தபின் முறையாகப் போக்கவும் ஆற்றலைப் பெறுகிறான். இதன் மூலம் பிறவி நோக்கத்திற்கு முரண்படாது அவன் பயணம் இனியவையாக அமையும். இத்தகைய பெருமை வாய்ந்த யோகப் பயிற்சியில் மிகவும் மதிப்புடைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்று வரும் பேறுபெற்ற உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -- Sent from Fast notepad
சனி, டிசம்பர் 21, 2013
மருந்து -கேழ்வரகு
கேழ்வரகின் மருத்துவ பயன்கள்:-
கேழ் வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும்.
அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரககல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது.
இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
எடை இழக்க:-
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது.
இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.
ஆரோக்கியமான எலும்புகளைப் பெற :-
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.
நீரிழிவு நோயைக் குணப்படுத்த :-
கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
ரத்தத்தில் கொழுப்பை குறைக்க :-
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ரத்த சோகையைக் குணப்படுத்த :-
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
சோர்வைப் போக்க :-
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
புரதச்சத்து/அமினோ அமிலங்கள் :-
உடலின் இயல்பான செயல் பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
பிற ஆரோக்கிய நிலைமைகள் :-
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த :-
கேழ்வரகை வறுத்து உண வோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.
இயற்கை உணவு தானியங்களுடன் இணைந்து வாழ்ந்த மனித சமுதாயம் அன்று நோயற்ற வாழ்க்கை முறையை இனிதே அனுபவித்து வந்தது. ஆனால் இன்றோ எந்திர வாழ்க்கை, நேரமின்மை, பணிச்சுமை, பணத்தை மட்டுமே பரிச்சயமாக பார்க்கும் எண்ணம் போன்ற எண்ணற்ற காரியங்களால் இயற்கை உணவை அறவே மறந்து செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கிறான். அதனை கவுரமாகவும் எடுத்துக்கொள்ளும் கட்டாயத்திலும் இன்றைய மனித வாழ்க்கை முறை மாறி வருகிறது.
அதனால் ஏற்படும் மாற்றம்:-
எனவே நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பித்திக்கொள்வதோடு, உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக் கொண்டு இனிதே வாழலாம்.
கேழ்வரகு கூழ்- ஒரு பார்வை:-
தேவையானவை:
கேழ்வரகு மாவு – 2 கப்,
நொய்யரிசி - 1/4 கப்
கடைந்த மோர் – 1 கப்,
தண்ணீர் – முக்கால் கப்,
உப்பு – தேவையான அளவு,
துருவிய கேரட் – 3 டீஸ்பூன்,
நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சிறிய வெங்காயம் – சிறிதளவு.
செய்முறை:
கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து முதல் நாள் இரவே தனியாக வைத்து புளிக்கவிடவும்.
மறுநாள் காலை ஒரு பத்திரத்தை ( பானை இருந்தால் மிக சிறந்தது ) அடுப்பில் வைத்து 3கப் நீர் விட்டு நொய்யரிசி போட்டு வேகவைத்து பின்னர் புளித்த மாவை ஊற்றி அடி பிடிக்காமல் நன்கு கிளறிகொண்டு இருக்கவும். இது கையில் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம் .
இப்போது இறக்கி ஆறவைக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு எடுத்து நீர், உப்பு சேர்த்து கரைத்து கொள்ளலாம்.
இத்துடன் மோர், பச்சைமிளகாய், கேரட், சிறிய வெங்காயம், இஞ்சி சேர்த்து சாப்பிடவும்.
இந்த மோர் கூழ் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது.
செவ்வாய், டிசம்பர் 10, 2013
ஆக்கினை
ஆக்கினை
உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே எண்ணிப் பழகிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலையில், மன அலைகள் வினாடிக்கு 14 முதல் 40 வரை (14 to 40 cycles per second) அமைகின்றன. ஆற்றல் முழுவதும் நுணுகி, மனத்தை, மன அலையை, சுழலை அமைதிப்படுத்தும்போது 'பீட்டா அலை' (beta wave) என்று சொல்லக்கூடிய உணர்ச்சி நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு வந்துவிட முடியும். உதாரணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தின் மானேஜராக இருக்கும் பொழுது அவரது அதிகாரம் அந்த நிறுவனம் முழுவதும் வியாபித்திருக்கிறது; அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பகுதி - அதிகாரியுடைய அதிகாரம் அந்தப் பகுதியோடு முடிகிறது. அந்தப் பகுதியில் பணியாற்றும் ஒரு எழுத்தரின் பொறுப்பு, அவர் பார்க்கும் கோப்புகளோடு நின்றுவிடுகிறது. அதுபோலவே, நம் மனம் எதை எண்ணிப் பழகி இருக்கிறதோ அந்த அலை நீளத்திலேயே இருக்கும். தியானத்தின் போது அதை விடுத்து எல்லா நிலைகளிலேயும் கொண்டு வந்து நாம் இணைப்புக் கொடுத்துப் பழகிக் கொள்கிறோம். 'பீட்டா அலை' (beta wave)யில் இருந்து 'ஆல்பா அலை' (alpha wave)க்கு வருகிறோம்; அதாவது உறக்கத்தில் என்ன நிலை வருமோ, அந்த நிலைக்கு வருகிறோம். ஆனால் உறங்காத விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம். இதைத் தான் ஆக்கினை நிலை என்று தியானப் பயிற்சியிலே சொல்கிறோம்.
உள்ளுணர்ந்து உயிரைக் கவனிக்கிறபொழுது, மனம் ஒரு பொருளாகவோ, வடிவமாகவோ, குணமாகவோ மாறாது. அப்படி ஒடுங்கி ஒடுங்கி மனம் நுணுகிய நிலையில் இருக்கும்; அது வரையிலும் 'ஆல்பா அலை' (alpha wave) நிலையிலேயே இருக்கும். உறக்க நிலையிலும் மனம் வடிவம் எடுப்பதில்லை, குணமாக இருப்பதில்லை. அதனால், 'ஆல்பா அலை' (alpha wave) உறக்கத்தில் தானாகவே வந்து விடும்.
இத்தகைய அலை நீளத்தை நம்மால் பாதுகாக்க முடியுமானால், நமக்கு எந்த விஷயத்திலும் உணர்ச்சி வயப்பட்ட நிலை வாராது; மிகுந்த பற்றுதலினால், ஆழ்ந்த உணர்ச்சி வயப்படும் நிலை ஏற்படாது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
மறைபொருட்களை உணரும் நிலை
மறைபொருட்களை உணரும் நிலை
பிரம்மஞானம் உலகில் மக்கள் அனைவருக்கும் பரவாமல் தடைபட்டதற்கு முக்கிய காரணம் உண்டு. அதை உணர்ந்து கொண்டு, தக்க முறையில் அந்தத் தடைகளைக் களைய வேண்டும். தடைக்குக் காரணங்களாவன:
அனைத்தியக்க அருட் பேராற்றலான இறைநிலை – பிரம்மம்,
அதிலிருந்து தோன்றிய விண்,
விண்சுழலிருந்து தோன்றிய காந்தம்,
காந்தத் தன்மாற்றங்களாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் – இவற்றின் கடைசி அலை இயக்கமாகிய மனம்.
இவையனைத்தும் மறைபொருட்கள். இவை இல்லையென்று மறுத்துக் கூற முடியாது. ஆயினும், இவற்றை அறிவதற்காகவே ஆறாவது அறிவு எனும் சிந்தனையாற்றல் மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஐந்து புலன்கள் மூலம் தோற்றப் பொருட்களை உணர்வது ஐயறிவு.
புலன்கள் மூலம் உணரப் பெறும் பொருட்களுக்கு மூலமான மனம், காந்தம், விண், மெய்பொருள் இவற்றை உணரக்கூடிய அறிவுதான் ஆறாவது அறிவு. புலன்களால் பொருட்களை உணரும்போது மன அலைச்சுழல் விரைவு நிலையில் மறைபொருட்கள் விளங்கா. மன அலைச்சுழல் விரைவை அகத்தவச் சாதனையால் குறைத்து, அந்த நுண்ணிய நிலையில் தான் மறைபொருட்களை உணர முடியும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
கேள்வி பதில்
கேள்வி: சுவாமிஜி, அகத்தவம் செய்யாமலே மனிதன் நல்வாழ்வு வாழ்ந்து இறைநிலை அடைய முடியாதா ?
வேதாத்திரி மகரிஷியின் பதில்: மனிதன் இரண்டடுக்கு வினைப்பயனை உடையவன்.
1. பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்தானோ அது பிராரப்த கர்மம் எனப்படும்.
2. கருவழியே அவனது முன்னோர்களிடமிருந்து என்ன பதிவுகளைப் பெற்றானோ அது சஞ்சித கர்மம் என்று சொல்லக்கூடிய பழவினையாகும்.
இவையிரண்டும் சேர்ந்த தொகுப்பே ஒரு மனிதனின் தன்மை (Personality) ஆகும்.
இதன் வழியாகத்தான் மனிதன் செயல்களைச் செய்து கொண்டே போவான். இந்தப் பதிவுகளில் நல்ல பதிவுகளும் உள்ளன, துன்பம் விளைவிக்கும் தீயபதிவுகளும் உள்ளன. தீயவற்றைத் தவிர்த்து நல்ல பதிவுகளையே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தீய பதிவுகள் அவ்வப்பொழுது தோன்றித் தீய செயல்களைச் செய்ய வைத்து, அதன் மூலமாகத் துன்பங்களை மனிதன் அடைய வேண்டியிருக்கும். இவ்வாறு வாழ்வின் நோக்கத்திற்கு முரணான தீயபதிவுகள் அதிகரித்துக் கொண்டே போனால் பிறவிகள் பல பெருங்கடலாக நீளும். வாழ்வில் சலிப்புதான் ஏற்படும்.
அப்படியின்றி, துன்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும். வேண்டாத பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தான் இன்று பழக்கத்திற்கும், விளக்கத்திற்குமிடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான்.
எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றிலான பழக்கப் பதிவுகளிலிருந்து மனிதன் விடுபட்டு, தான் விரும்பிய நல்வழியில் செல்ல அவனுக்கு முறையான உளப்பயிற்சி முறை வேண்டும். அதைத்தான் நமது சித்தர் பெருமான் திருமூலர் ஒரு கவியில்,
"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க இருவழி யுண்டு
தனக்கும் கிளைக்கும்அக் கேடில் முதல்வன்
விளைக்கும் தவம்அறம் மேற்றுணை யாமே." என்று குறிப்புட்டுள்ளார்.
வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையை கடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள மனிதன், அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று தவம்;
மற்றொன்று அறம;
இவையிரண்டையும் செய்தால் அவன் மாத்திரம் அல்லாமல் அவனுக்குப் பின்வரும் சந்ததிகளும் நன்மை பெறுவார்கள் என்கிறார்.
மனதை உயிர்மேல் வைத்து, ஒடுங்கி நின்று தவம் செய்யும் பொழுது, மன அலை விரைவு குறைந்து, உயிரின் தன்மையை உணர்கிறான். வினையின் பதிவுகள் அவற்றின் பிரதிபலிப்புகள் இவற்றை உணர்கிறான். தகாத தீய வினைப்பதிவின் காரணமாக உடலிலே வரக்கூடிய நோய்களையும், மனதில் வரக்கூடிய களங்கங்களையும் அறிந்து அறநெறி மூலம் அகற்றிக் கொள்கிறான்.
மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அதற்கு முறைப்படுத்தப்பட்ட உளப்பயிற்சி வேண்டும். அப்பயிற்சிக்குத்தான் அகத்தவம் என்று பெயர். அகத்தவமின்றி மன அலைச் சுழல் குறையாது. விளைவறிந்த விழிப்புநிலை வராது. பதிவு நீக்கம் பெற முடியாது. வீடுபேற்று நிலைகிட்டாது. வாழ்வின் நோக்கம் நிறைவேறாது.
ஆகவே நல்வாழ்வு பெற அகத்தவம் மிக மிக அவசியம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கேள்வி பதில்
நிறைவான வாழ்வு
===============
வினா : தவத்தினால் வாழ்வு ஒளிவிடும் என சுவாமிஜி கூறுகிறார்கள். தவம் செய்து ஊழினை மாற்றி அமைக்க முடியுமா? தவம் இயற்றுபவர்கள் எல்லோருமே நிறைவான வாழ்வு வாழ்கிறார்களா?
...
விடை : தவத்தினால் வாழ்வை ஒளிமயமாக்கிக் கொள்ள முடியும் இதற்குச் சான்றாக
"ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்".
என்னும் குறட்பாவே போதுமானது. விதியை மதியால் வெல்லலாம் என்னும் பழமொழியையும் நினைத்துப் பாருங்கள். மதி என்பது அறிவு. தவம் செய்வதினால் வலிமையும், கூர்மையும் மதிபெறும். அத்தகு மதியானது இனி ஆற்ற இருக்கும் செயல்களை ஒழுங்குபடுத்தி வாழ்க்கையில் இது வரை கிடைக்காத வெற்றியையும் மேன்மையையும் ஏற்படுத்தித் தரும். தவம் செய்பவர்கள் முறையாகவும் தொடர்ந்தும் செய்து வருவதோடு நமது மனவளக்கலை மன்றத்தில் மட்டும் போதிக்கப்படும் தற்சோதனை பயிற்சிகளையும் சேர்த்துச் சிரத்தையோடு செய்து வருவார்களானால் தங்களது இயற்கை சுபாவங்களை மாற்றி அமைக்கும் குணநலப்பேற்றை எய்த முடியும். நிறைவாக முழுமைப் பேற்றையும் எய்தலாம். நீங்கள் கேட்கக்கூடிய நிறைவான வாழ்வும் அதுவே. அத்தகு மேம்பட்ட வாழ்க்கையினை நமது மன்றத்தினர் அனேகம் பேர் அடைந்திருக்கிறார்கள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
ஞாயிறு, டிசம்பர் 08, 2013
மஹரிஷியின் கல்விமுறை
புதிய மாதிரிக் கல்வி முறை
• குழந்தைகள் ஒன்பது வயது முடிந்த பிறகு, பத்தாவது வயதில் ஆண்-பெண் இருபாலரும் இந்தப் பள்ளியில் சேரலாம்.
• உறைவிட வசதியோடு, இரவும் பகலும் குழந்தைகள் பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் (Residential School) முறையில் இக்கல்வி நிலையம் செயல்பட வேண்டும்.
• எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவ அறிவு, ஒழுக்கபழக்கங்கள் என்ற நான்கு வாழ்க்கைக் கூறுகளும் இப்பள்ளியில் போதிக்கப்பட வேண்டும்.
• ஆன்மிக அறிவு மேம்பாடு, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம், சமையல் என்ற ஆறு துறைகளில் போதனைகள் நடைபெற வேண்டும்.
• போதனை மொழிகள் அந்தந்த பகுதிகளில் வழங்கும் தாய்மொழி, நாட்டுக்குப் பொதுவான மொழி, உலகப் பொதுவான ஆங்கில மொழி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சம மதிப்பளித்து, போதனைகள் நடைபெற வேண்டும்.
• முதல் ஆறு ஆண்டுகளுக்கு, எழுத்தறிவோடு வேளாண்மை, துணி நெசவு, வீடு கட்டுதல், விஞ்ஞானக் கருவிகள் செய்தல், சமையல் செய்தல் இவற்றில் அடிப்படைக் கல்வியும் பதினாறு முதல் இருபது வரையில் ஏதேனும் ஒரு துறையில் உயர்தரக் கல்வியும் (Degree Course) அளிக்க வேண்டும்.
• மாணவர்களுக்கு உணவுக்கு வேண்டிய தானிய வகைகளை உற்பத்தி செய்து கொள்ள வசதியாக உள்ள அளவில் விவசாய நிலங்களும் ஒவ்வொரு பள்ளிக்கும் இருக்க வேண்டும்.பால் கறக்கும் மாடுகளும் போதிய அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
• பதினொரு வயதிற்குமேல் ஆண்களும், பெண்களுக்கும் தனித்தனியே தாங்கும் வசதி கொடுக்க வேண்டும். எழுத்து, தொழில் போதனைகளின் பொது அனைவரும் ஒன்றாக இருக்கலாம்.
• வாரத்திற்கு ஒருமுறை பெற்றோர்கள் வந்து தங்கள் குழந்தைகளைப் பார்த்து மகிழ வாய்ப்பும் வசதியும் அளிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கொருமுறை சனி, ஞாயிறு இரு நாட்களில் குழந்தைகளைப் பெற்றோர் இல்லங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
• காலையில் புஞ்சை தானியத்திலான கஞ்சியும், பகலில் அரிசிச்சோறும், காய்கள்,பருப்பு இவையும்,மோர்/தயிர், நெய் இவையும் சேர்த்து எளிய உணவாக கொடுக்க வேண்டும்.
மென் முறையான விளையாட்டுகளில் அனைவருக்கும் கட்டாயப் பயிற்சி அளிக்க வேண்டும்.
• இருபதுவயது முடியும்போது, கல்வியில் முழுத் தேர்ச்சி உள்ளவர்களாக ஏதேனும் தொழில் நிபுணராக ஒவ்வொருவரும் தயாராக வேண்டும். கல்வி முறையோடு நாட்டுக்கு ஏற்ற தொழில் முறியும் ஒத்தவாறு அமைய வேண்டும். தேவைக்கு வேண்டிய பொருட்களைப் பெருக்கவும், எல்லோருக்கும் வேலை கிடைக்கும் முறையிலும், தொழில் திட்டம் உருவாக்க வேண்டும். வேலையில்லாக் குறைபாடு ஏற்படும் இடங்களில்,உள்ள வேலையை அனைவருக்கும் பங்கிடும் முறையில் வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
• தேவையிருந்தும் தொழில் செய்யத் தெரிந்திருந்தும் வேலை கிடைக்கவில்லையெனில், அத்தகைய மனிதன் குற்ற வழியில்தான் வாழ முனைவான். இது சமுதாய வளத்திர்க்கே நச்சாகும்.
• இத்தகைய கல்வி முறையால், அரசாங்கம் இன்று கல்விக்காகச் செலவலிக்கும் தொகையில் பெருமளவு குறைந்து விடும்.கல்விக்கூடமே தொழிற்சாலைகளாகவும் நேர்மையான வணிக நிலையங்களாகவும் மாற்றம் பெரும்.
• முதலில் நாட்டளவில் சமுதாயத் தலைவர்களைக் கூட்டி, இத்திட்டத்தை முன்வைத்து ஆலோசனை செய்ய வேண்டும். பிறகு, முதலில் மாவட்டத்திற்கொன்றும், பிறகு வட்டத்திற்கொன்றுமாக இந்த மாதிரிப் பள்ளிகளை அமைத்து நலம் காண வேண்டும்.
“இதுவரையில் மனிதன் அடைந்துள்ள முன்னேற்றங்களில் இறுதி பயனாக இருக்க வேண்டியது உயர்தர முறையில் குழந்தைகளை வளர்ப்பதே ஆகும்”
=அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.
வெள்ளி, டிசம்பர் 06, 2013
கேள்வி பதில்
கேள்வி : சுவாமிஜி, அகத்தவம் செய்யாமலே மனிதன் நல்வாழ்வு வாழ்ந்து இறைநிலை அடைய முடியாதா?
மகரிஷியின் பதில் : மனிதன் இரண்டடுக்கு வினைப்பயனை உடையவன். பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்தானோ அது பிராரப்த கர்மம் எனப்படும். கருவழியே அவனது முன்னோர்களிடமிருந்து என்ன பதிவுகளைப் பெற்றானோ அது சஞ்சித கர்மம் என்று சொல்லக்கூடிய பழவினையாகும். இவையிரண்டும் சேர்ந்த தொகுப்பே ஒரு மனிதனின் தன்மை (Personality) ஆகும்.
இதன் வழியாகத்தான் மனிதன் செயல்களைச் செய்து கொண்டே போவான். இந்தப் பதிவுகளில் நல்ல பதிவுகளும் உள்ளன, துன்பம் விளைவிக்கும் தீயபதிவுகளும் உள்ளன. தீயவற்றைத் தவிர்த்து நல்ல பதிவுகளையே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தீய பதிவுகள் அவ்வப்பொழுது தோன்றித் தீய செயல்களைச் செய்ய வைத்து, அதன் மூலமாகத் துன்பங்களை மனிதன் அடைய வேண்டியிருக்கும். இவ்வாறு வாழ்வின் நோக்கத்திற்கு முரணான தீயபதிவுகள் அதிகரித்துக் கொண்டே போனால் பிறவிகள் பல பெருங்கடலாக நீளும். வாழ்வில் சலிப்புதான் ஏற்படும்.
அப்படியின்றி, துன்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும். வேண்டாத பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தான் இன்று பழக்கத்திற்கும், விளக்கத்திற்குமிடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான்.
எண்ணம், சொல், செயல் ஆகிய இம்மூன்றிலான பழக்கப் பதிவுகளிலிருந்து மனிதன் விடுபட்டு, தான் விரும்பிய நல்வழியில் செல்ல அவனுக்கு முறையான உளப்பயிற்சி முறை வேண்டும். அதைத்தான் நமது சித்தர் பெருமான் திருமூலர் ஒரு கவியில்,
"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்க இருவழி யுண்டு
தனக்கும் கிளைக்கும்அக் கேடில் முதல்வன்
விளைக்கும் தவம்அறம் மேற்றுணை யாமே.
என்று குறிப்புட்டுள்ளார்.
வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையை கடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள மனிதன், அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றொன்று அறம். இவையிரண்டையும் செய்தால் அவன் மாத்திரம் அல்லாமல் அவனுக்குப் பின்வரும் சந்ததிகளும் நன்மை பெறுவார்கள் என்கிறார்.
மனதை உயிர்மேல் வைத்து, ஒடுங்கி நின்று தவம் செய்யும் பொழுது, மன அலை விரைவு குறைந்து, உயிரின் தன்மையை உணர்கிறான். வினையின் பதிவுகள் அவற்றின் பிரதிபலிப்புகள் இவற்றை உணர்கிறான். தகாத தீய வினைப்பதிவின் காரணமாக உடலிலே வரக்கூடிய நோய்களையும், மனதில் வரக்கூடிய களங்கங்களையும் அறிந்து அறநெறி மூலம் அகற்றிக் கொள்கிறான்.
மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால் அதற்கு முறைப்படுத்தப்பட்ட உளப்பயிற்சி வேண்டும். அப்பயிற்சிக்குத்தான் அகத்தவம் என்று பெயர். அகத்தவமின்றி மன அலைச் சுழல் குறையாது. விளைவறிந்த விழிப்புநிலை வராது. பதிவு நீக்கம் பெற முடியாது. வீடுபேற்று நிலைகிட்டாது. வாழ்வின் நோக்கம் நிறைவேறாது. ஆகவே நல்வாழ்வு பெற அகத்தவம் மிக மிக அவசியம்.
கேள்வி பதில்
கேள்வி: ஐயா, ' மனசாட்சி ' என்று கூறுகிறார்களே அது கருமையம் தானா?
மகரிஷியின் பதில்: ஆம். அதாவது ஒரு பொருளை வியாபாரி தெருவில் விற்றுக் கொண்டு வருகிறார். பொருளின் விலை என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர் 10 ரூபாய் விலை சொல்கிறார். ஏனப்பா நீ என்ன விலைக்கு இதை வாங்கினாய் என்று கேட்கிறீர்கள். அதற்கு அவர் 'நான் 8 ரூபாய்க்கு வாங்கினேன்' என்று உங்களிடம் கூறுவார். ஆனால் உண்மையில் அவர் 5 ரூபாய்க்குத் தான் வாங்கியிருப்பார். உண்மையைச் சொன்னால் நீங்கள் 6 அல்லது 7 ரூபாய்க்குத் தான் வாங்க முடியும் என்று கூறுவீர்கள்' என எண்ணி 8 ரூபாய்க்கு வாங்கியதாக வாய் சொல்லும். ஆனால் அங்கே உள்ளே உள்ள கருமையப் பதிவு 5 ரூபாய்க்குத்தான் வாங்கினேன் என்று சொல்லுமல்லவா. அது தான் மனசாட்சி.
ஒரு திருடன் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். நீதிபதி திருடனைப் பார்த்து "ஏனப்பா நீ இன்னின்ன பொருட்களை இந்த விலாசத்தில் உள்ள வீட்டில் திருடினாய் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதே நீ என்ன பதில் சொல்கிறாய்?" என்று கேட்கிறார். திருடனுக்குள், தான் அந்த வீட்டில் எப்படிப் போய் எந்த நேரத்தில் என்னென்ன பொருள்களைத் திருடினானோ அத்தனையும் கருமையத்திலிருந்து காட்சியாகிக் கொண்டேயிருக்கும். ஆனால் வாய் "நான் திருடவே இல்லைங்க" என்று கூறும். நமக்குள் உள்ள அறிவே தெய்வமாக இருந்து கூறுவதைத்தான் 'மனசாட்சி' என்கிறோம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கேள்வி பதில்
கேள்வி : சுவாமிஜி அவர்களே, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வினைப் பதிவுகள் திருமணம் செய்து கொண்டபின் உடல் இணைப்பால் ஒருவர் பதிவு மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
மகரிஷியின் பதில் : நிச்சயமாக பதிவுகளில் பரிமாற்றம் ஏற்படும். அவ்வாறு ஏற்படுவதே இருவரும் இணைந்து செயல்பட அல்லது எதிர்த்து சண்டையிட காரணமாகிறது. ஏற்கனவே ஒருவருக்கொருவர் உள்ள பதிவை மாற்றுவதற்குத்தான் இருவருமே இணைகிறார்கள். இதற்கான பதிவு ஏற்கனவே செயலுக்கு வந்த பிறகு தான் இயற்கை இருவரையும் இணைத்து வைக்கிறது. ஆனால் மேல் எழுந்த வாரியான பதிவுகள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ இருக்கும். அவையெல்லாம் ஒருவரை ஒருவர் பாதிப்பதில்லை. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு செயல் பிடிக்கும் என்றால் மற்றவருக்கும் அது பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
திங்கள், டிசம்பர் 02, 2013
marunthu
புனித தீர்த்தம்
1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.
இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .
இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.
தத்துவம்
பரம் - உயிர் - அறிவு : உணர்ச்சிகளில் அறிவியங்க உயிர்விளக்க மாகாது உள்ளொடுங்க உயிர் உணர்வாம் உயிர் ஒடுங்க தெய்வநிலை; உணர்ச்சி உயிர் பரம் மூன்றும் உணரவழி அகத்தவமே, உண்மை உயிர் உலகு அறிவு உணர்பவனே மூன்றாவான். உயிர் நிலையறிய : கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை, உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை. சச்சிதானந்தம் : உயிரின் இயக்கமே உணர்ச்சிகள் அனைத்துமாம் உயிரின் உணர்தலே உள்ளமாம் அறிவிதே; உயிரின் ஒடுக்கமே வெளியெனும் உயர்வீடு உயிரின் நிலைகளே உயர் சத்-சித்-ஆனந்தம். பக்தி - யோகம் - முக்தி - ஞானம்: அறிவு அறிவுக்கு அடிமையாவதே பக்தி அறிவை அறிவால் அறியப்பழகுதல் யோகம் அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி அறிவை யறிந்தோர் அன்பின் அறமே ஞானம். - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
மருந்து-குப்பைமேனி
நோய் தீர்க்கும் மருந்தாக மூலிகைகளும் மரக்கறி வகைகளும் - பகுதி - 6
குப்பை மேனி
************
குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது
போலும். வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.
தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.
குடும்பம் :- EUPHORBIACEAE.
இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில் பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது.
இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது.
சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர்.
வசீகரப்படுத்தும்இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .
நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.
வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.
தோல் நோய் நீக்கும் குப்பைமேனி!
மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.
குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.
குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.
குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)
எப்போதும் எந்த மூலிகைகளையும் தகுந்த மருத்துவரை ஆலோசித்து பின் உள்ளுக்கு சாப்பிடுவது நல்லது .இது அணைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும் .
மேலும் எந்தமூலிகையும் சுத்தி செய்தல் என்று ஒரு முறை உள்ளது .அது இன்னும்
பலரிடம் ரகசியமாகவே இருக்கிறது .மேலும் மூலிகைகளின் மாந்திரிகத்தன்மை குறித்தும் பெரிய தகவல்கள் மர்மமாக உள்ளது .ஒட்டுன்னிகளைப்பற்றியும் பல தகவல் உள்ளது .
பிரம்மம்
பிரம்ம ஞானம்
சுத்த வெளி தான் இறைநிலை. இதுவேதான் கடவுள் ஆகும். இறைநிலையானது எல்லாம் வல்ல பூரணப் பொருள். இதன் இயல்பான தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றாலால் அதற்குள்ளாகவே செறிவு ஏற்பட்டு மடிப்புகள் விழுந்து, அதன் சூழ்ந்தழுத்தும் ஆற்றாலாலேயே மிக விரைவான தற்சுழற்சி பெற்ற நுண்துகள்தான் முதல்நிலை "இறைத்துகள் " எனும் பரமாணு. இந்த நுண்ணணுக்களின் கூட்டங்களே பேரியக்க மண்டலத்தில் காணும் அனைத்துத் தோற்றங்களும் ஆகும்.
முதல் நிலை இறைத்துகளின் விரைவான தற்சுழற்சியானது அதைச் சுற்றியுள்ள தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலான இறைவெளியோடு உரசும்போது எழுகின்ற நுண் அலைகள் தாம் காந்தம் எனும் நிழல் விண்கள். நிழல் விண்கள் இறைவெளியின் சூழ்ந்தழுத்ததைத் தாங்கமுடியாமல் கரைந்து போகும் நிகழ்ச்சிகள் தான் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்பனவாகும்.
இறைவெளியானது இறைத்துகள்,விண், காந்தம், காந்தத் தன் மாற்ற நிலைகளான அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறுவகை, இவற்றை மனதில் பதிய வைத்துக் கொண்டு பிரபஞ்சத்தை எண்ணிப் பார்த்தால், ஆராய்ந்தால் பேரியக்க மண்டலத் தோற்றம், இயக்கம், விளைவுகள் அனைத்தும் விளங்கிவிடும். பரமாணு முதல் கொண்டு எந்தப் பொருளும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும். எல்லா இடங்களிலும், எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் எனப்படுகின்றது
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
திருக்குறள்
திருக்குறள் உட்பொருள் விளக்கம்
குறள் 214
“ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான்
செத்தாருள் வைக்கப் படும்”.
ஓப்புரவறிதல் அதிகாரத்தின் 4-வது கவி
உலகில் உள்ள சடப்பொருட்கள், உயிப்பொருட்கள் அனைத்தும் இறையாற்றல் என்னும் அற்புதப் பேராற்றலால் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இறைநிலையில் அடங்கியுள்ள இருப்பு, விரைவு, அறிவு எனும் முத்தன்மையும், எந்தத் தோற்றத்திலும் வடிவம், துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision, Rugularity) இவையாக அமைந்து இனிமையான முறையில் இயற்கையாக (with Natural Rhythm) இயங்கிக் கொண்டிருப்பதை உணருகிறோம். சடப்பொருட்களோடும் உயிர்ப்பொருட்களோடும் தினப்படி வாழ்வில் தொடர்பு கொள்ளும் வாய்ப்புப் பெற்றவன் மனிதன். சடப்பொருட்கள் தரத்திற்கேற்பவும், அவற்றோடு தொடர்பு கொள்ளக் கூடிய பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்; பழகிக் கொள்ள வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எந்தப் பொருட்களின் தரம் குறையாமலும், உயிர்களுக்கு வருத்தம் நேராமலும் நுட்பத்தோடு, அவ்வவற்றோடு தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும். எந்தப் பொருளுக்கும் முறையான அணு அடுக்குகள் உள்ளன. அத்தகைய அணு அடுக்குகளான கட்டடங்களுள் காந்த ஆற்றாலானது நிரம்பி ஒவ்வொரு வகையான அசைவிலும் அது தன் காந்த ஆற்றலை அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மனமாக மாறுவதுடன், உயிர் இனங்களிலே இவற்றிற்கு மேலாக இன்பம், துன்பம் என்ற உணர்வுகளைப் பெறுவதும் இயல்பு. இந்த நுட்பமான உண்மைகளை அறிந்து எந்தப் பொருளையும், உயிரினங்கள், மனிதர்கள் இவற்றையும் அந்தந்த நிலையிலும் இடங்களிலும் அவற்றின் நிலைமைக்கு ஒத்து, உணர்ந்து, விளைவறிந்த விழிப்போடு கையாளவும், தொடர்பு கொள்ளவும் வேண்டும் என்பதே இக்குறளிலுள்ள உட்கருத்தாகும். மனிதனுக்கு வாழ்வில் இத்தகைய பண்பு இருக்க வேண்டும். உடலாகவும், உயிராகவும், மனமாகவும் இருக்கும் மனிதன், இத்தகைய பேரறப் பன்பாட்டோடு வாழ வேண்டும். அப்படி இல்லையானால் நடைப்பிணமாகத்தான் அவனைக் கருத நேரிடும். பிணம் என்றால் பயனற்றது என்ற ஒரு கருத்தோடு அது இருக்கும் போது மற்றவர்களுக்கு கெட்ட மனம் வீசுவதாலும் கிருமிகளை வெளியேற்றுவதாலும் சுற்றியுள்ளவர்ளுக்குத் துன்பமே உண்டாகும். அதுபோல உயிரோடு இருப்பவர்களும் பிறருக்கு உதவியின்றியும், துன்பம் விளைவித்துக் கொண்டேயும் இருந்தால் நடைப்பிணம் என்று மதிக்கப்படுவர். ஒத்து உணர்ந்து வாழும் பண்பு இல்லாதவர்கள் நடைப்பிணமாக மதிக்கத் தக்கவர் என்று விளக்குகிறது இந்தக் குறள்.
திருக்குறள் உட்பொருள் விளக்கம்
குறள்: 214 பக்கம் 75.
திருக்குறள் உட்பொருள் விளக்கம் குறள் 202 “தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்” தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் 2-வது கவி தீமை பயக்கும் செயல்கள் பழிச்செயல் என்றும் பாவம் என்றும் வழங்கப்படுகின்றன. செயல்கள் எதிலும் தீமை என்பது இல்லை. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றால் எண்ணம், சொல், செயல்கள் ஆகிய மூன்று வகை வினைகளை ஆற்றுகிறோம். எந்த வினையானாலும் தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும் பிற்காலத்திலும் உடலுக்கும், மனதுக்கும் துன்பம் எழாதபடி அளவோடும் முறையோடும் காத்துக் கொண்டால், அதுவே அறவழியாகும். நல்வினைகள் ஆகும். அவ்வாறன்றி நமது செயல் தனக்கோ பிறர்க்கோ, உடலுக்கோ மனதுக்கோ துன்பம் விளைக்குமேயானால் அதுவே பழிச்செயல். இத்தகைய தீய செயல்கள்தான் துன்பத்தை விளைவித்து இறைஞானம் பெறுவதைத் தடை செய்கிறது. தீயைக் கண்டு எவ்வாறு அஞ்சியும், ஒதுங்கியும் நிற்கிறோமோ அதுபோல தீய விளைவுகளையும் கண்டு அஞ்சிச் செயலாற்றி நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று கூறுகிறது இந்தக் குறள். திருக்குறள் உட்பொருள் விளக்கம் குறள்: 202, பக்கம்: 74
திருக்குறள் உட்பொருள் விளக்கம் குறள் 202 “தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்” தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் 2-வது கவி தீமை பயக்கும் செயல்கள் பழிச்செயல் என்றும் பாவம் என்றும் வழங்கப்படுகின்றன. செயல்கள் எதிலும் தீமை என்பது இல்லை. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றால் எண்ணம், சொல், செயல்கள் ஆகிய மூன்று வகை வினைகளை ஆற்றுகிறோம். எந்த வினையானாலும் தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும் பிற்காலத்திலும் உடலுக்கும், மனதுக்கும் துன்பம் எழாதபடி அளவோடும் முறையோடும் காத்துக் கொண்டால், அதுவே அறவழியாகும். நல்வினைகள் ஆகும். அவ்வாறன்றி நமது செயல் தனக்கோ பிறர்க்கோ, உடலுக்கோ மனதுக்கோ துன்பம் விளைக்குமேயானால் அதுவே பழிச்செயல். இத்தகைய தீய செயல்கள்தான் துன்பத்தை விளைவித்து இறைஞானம் பெறுவதைத் தடை செய்கிறது. தீயைக் கண்டு எவ்வாறு அஞ்சியும், ஒதுங்கியும் நிற்கிறோமோ அதுபோல தீய விளைவுகளையும் கண்டு அஞ்சிச் செயலாற்றி நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று கூறுகிறது இந்தக் குறள். திருக்குறள் உட்பொருள் விளக்கம் குறள்: 202, பக்கம்: 74
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)