திருக்குறள் உட்பொருள் விளக்கம்
குறள் 214
“ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான்
செத்தாருள் வைக்கப் படும்”.
ஓப்புரவறிதல் அதிகாரத்தின் 4-வது கவி
உலகில் உள்ள சடப்பொருட்கள், உயிப்பொருட்கள் அனைத்தும் இறையாற்றல் என்னும் அற்புதப் பேராற்றலால் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இறைநிலையில் அடங்கியுள்ள இருப்பு, விரைவு, அறிவு எனும் முத்தன்மையும், எந்தத் தோற்றத்திலும் வடிவம், துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision, Rugularity) இவையாக அமைந்து இனிமையான முறையில் இயற்கையாக (with Natural Rhythm) இயங்கிக் கொண்டிருப்பதை உணருகிறோம். சடப்பொருட்களோடும் உயிர்ப்பொருட்களோடும் தினப்படி வாழ்வில் தொடர்பு கொள்ளும் வாய்ப்புப் பெற்றவன் மனிதன். சடப்பொருட்கள் தரத்திற்கேற்பவும், அவற்றோடு தொடர்பு கொள்ளக் கூடிய பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும்; பழகிக் கொள்ள வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எந்தப் பொருட்களின் தரம் குறையாமலும், உயிர்களுக்கு வருத்தம் நேராமலும் நுட்பத்தோடு, அவ்வவற்றோடு தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும். எந்தப் பொருளுக்கும் முறையான அணு அடுக்குகள் உள்ளன. அத்தகைய அணு அடுக்குகளான கட்டடங்களுள் காந்த ஆற்றாலானது நிரம்பி ஒவ்வொரு வகையான அசைவிலும் அது தன் காந்த ஆற்றலை அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மனமாக மாறுவதுடன், உயிர் இனங்களிலே இவற்றிற்கு மேலாக இன்பம், துன்பம் என்ற உணர்வுகளைப் பெறுவதும் இயல்பு. இந்த நுட்பமான உண்மைகளை அறிந்து எந்தப் பொருளையும், உயிரினங்கள், மனிதர்கள் இவற்றையும் அந்தந்த நிலையிலும் இடங்களிலும் அவற்றின் நிலைமைக்கு ஒத்து, உணர்ந்து, விளைவறிந்த விழிப்போடு கையாளவும், தொடர்பு கொள்ளவும் வேண்டும் என்பதே இக்குறளிலுள்ள உட்கருத்தாகும். மனிதனுக்கு வாழ்வில் இத்தகைய பண்பு இருக்க வேண்டும். உடலாகவும், உயிராகவும், மனமாகவும் இருக்கும் மனிதன், இத்தகைய பேரறப் பன்பாட்டோடு வாழ வேண்டும். அப்படி இல்லையானால் நடைப்பிணமாகத்தான் அவனைக் கருத நேரிடும். பிணம் என்றால் பயனற்றது என்ற ஒரு கருத்தோடு அது இருக்கும் போது மற்றவர்களுக்கு கெட்ட மனம் வீசுவதாலும் கிருமிகளை வெளியேற்றுவதாலும் சுற்றியுள்ளவர்ளுக்குத் துன்பமே உண்டாகும். அதுபோல உயிரோடு இருப்பவர்களும் பிறருக்கு உதவியின்றியும், துன்பம் விளைவித்துக் கொண்டேயும் இருந்தால் நடைப்பிணம் என்று மதிக்கப்படுவர். ஒத்து உணர்ந்து வாழும் பண்பு இல்லாதவர்கள் நடைப்பிணமாக மதிக்கத் தக்கவர் என்று விளக்குகிறது இந்தக் குறள்.
திருக்குறள் உட்பொருள் விளக்கம்
குறள்: 214 பக்கம் 75.
திருக்குறள் உட்பொருள் விளக்கம் குறள் 202 “தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்” தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் 2-வது கவி தீமை பயக்கும் செயல்கள் பழிச்செயல் என்றும் பாவம் என்றும் வழங்கப்படுகின்றன. செயல்கள் எதிலும் தீமை என்பது இல்லை. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றால் எண்ணம், சொல், செயல்கள் ஆகிய மூன்று வகை வினைகளை ஆற்றுகிறோம். எந்த வினையானாலும் தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும் பிற்காலத்திலும் உடலுக்கும், மனதுக்கும் துன்பம் எழாதபடி அளவோடும் முறையோடும் காத்துக் கொண்டால், அதுவே அறவழியாகும். நல்வினைகள் ஆகும். அவ்வாறன்றி நமது செயல் தனக்கோ பிறர்க்கோ, உடலுக்கோ மனதுக்கோ துன்பம் விளைக்குமேயானால் அதுவே பழிச்செயல். இத்தகைய தீய செயல்கள்தான் துன்பத்தை விளைவித்து இறைஞானம் பெறுவதைத் தடை செய்கிறது. தீயைக் கண்டு எவ்வாறு அஞ்சியும், ஒதுங்கியும் நிற்கிறோமோ அதுபோல தீய விளைவுகளையும் கண்டு அஞ்சிச் செயலாற்றி நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று கூறுகிறது இந்தக் குறள். திருக்குறள் உட்பொருள் விளக்கம் குறள்: 202, பக்கம்: 74

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக