செவ்வாய், டிசம்பர் 10, 2013

கேள்வி பதில்

நிறைவான வாழ்வு =============== வினா : தவத்தினால் வாழ்வு ஒளிவிடும் என சுவாமிஜி கூறுகிறார்கள். தவம் செய்து ஊழினை மாற்றி அமைக்க முடியுமா? தவம் இயற்றுபவர்கள் எல்லோருமே நிறைவான வாழ்வு வாழ்கிறார்களா? ... விடை : தவத்தினால் வாழ்வை ஒளிமயமாக்கிக் கொள்ள முடியும் இதற்குச் சான்றாக "ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்". என்னும் குறட்பாவே போதுமானது. விதியை மதியால் வெல்லலாம் என்னும் பழமொழியையும் நினைத்துப் பாருங்கள். மதி என்பது அறிவு. தவம் செய்வதினால் வலிமையும், கூர்மையும் மதிபெறும். அத்தகு மதியானது இனி ஆற்ற இருக்கும் செயல்களை ஒழுங்குபடுத்தி வாழ்க்கையில் இது வரை கிடைக்காத வெற்றியையும் மேன்மையையும் ஏற்படுத்தித் தரும். தவம் செய்பவர்கள் முறையாகவும் தொடர்ந்தும் செய்து வருவதோடு நமது மனவளக்கலை மன்றத்தில் மட்டும் போதிக்கப்படும் தற்சோதனை பயிற்சிகளையும் சேர்த்துச் சிரத்தையோடு செய்து வருவார்களானால் தங்களது இயற்கை சுபாவங்களை மாற்றி அமைக்கும் குணநலப்பேற்றை எய்த முடியும். நிறைவாக முழுமைப் பேற்றையும் எய்தலாம். நீங்கள் கேட்கக்கூடிய நிறைவான வாழ்வும் அதுவே. அத்தகு மேம்பட்ட வாழ்க்கையினை நமது மன்றத்தினர் அனேகம் பேர் அடைந்திருக்கிறார்கள்.  - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக