புதிய மாதிரிக் கல்வி முறை
• குழந்தைகள் ஒன்பது வயது முடிந்த பிறகு, பத்தாவது வயதில் ஆண்-பெண் இருபாலரும் இந்தப் பள்ளியில் சேரலாம்.
• உறைவிட வசதியோடு, இரவும் பகலும் குழந்தைகள் பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் (Residential School) முறையில் இக்கல்வி நிலையம் செயல்பட வேண்டும்.
• எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவ அறிவு, ஒழுக்கபழக்கங்கள் என்ற நான்கு வாழ்க்கைக் கூறுகளும் இப்பள்ளியில் போதிக்கப்பட வேண்டும்.
• ஆன்மிக அறிவு மேம்பாடு, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம், சமையல் என்ற ஆறு துறைகளில் போதனைகள் நடைபெற வேண்டும்.
• போதனை மொழிகள் அந்தந்த பகுதிகளில் வழங்கும் தாய்மொழி, நாட்டுக்குப் பொதுவான மொழி, உலகப் பொதுவான ஆங்கில மொழி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சம மதிப்பளித்து, போதனைகள் நடைபெற வேண்டும்.
• முதல் ஆறு ஆண்டுகளுக்கு, எழுத்தறிவோடு வேளாண்மை, துணி நெசவு, வீடு கட்டுதல், விஞ்ஞானக் கருவிகள் செய்தல், சமையல் செய்தல் இவற்றில் அடிப்படைக் கல்வியும் பதினாறு முதல் இருபது வரையில் ஏதேனும் ஒரு துறையில் உயர்தரக் கல்வியும் (Degree Course) அளிக்க வேண்டும்.
• மாணவர்களுக்கு உணவுக்கு வேண்டிய தானிய வகைகளை உற்பத்தி செய்து கொள்ள வசதியாக உள்ள அளவில் விவசாய நிலங்களும் ஒவ்வொரு பள்ளிக்கும் இருக்க வேண்டும்.பால் கறக்கும் மாடுகளும் போதிய அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
• பதினொரு வயதிற்குமேல் ஆண்களும், பெண்களுக்கும் தனித்தனியே தாங்கும் வசதி கொடுக்க வேண்டும். எழுத்து, தொழில் போதனைகளின் பொது அனைவரும் ஒன்றாக இருக்கலாம்.
• வாரத்திற்கு ஒருமுறை பெற்றோர்கள் வந்து தங்கள் குழந்தைகளைப் பார்த்து மகிழ வாய்ப்பும் வசதியும் அளிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கொருமுறை சனி, ஞாயிறு இரு நாட்களில் குழந்தைகளைப் பெற்றோர் இல்லங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
• காலையில் புஞ்சை தானியத்திலான கஞ்சியும், பகலில் அரிசிச்சோறும், காய்கள்,பருப்பு இவையும்,மோர்/தயிர், நெய் இவையும் சேர்த்து எளிய உணவாக கொடுக்க வேண்டும்.
மென் முறையான விளையாட்டுகளில் அனைவருக்கும் கட்டாயப் பயிற்சி அளிக்க வேண்டும்.
• இருபதுவயது முடியும்போது, கல்வியில் முழுத் தேர்ச்சி உள்ளவர்களாக ஏதேனும் தொழில் நிபுணராக ஒவ்வொருவரும் தயாராக வேண்டும். கல்வி முறையோடு நாட்டுக்கு ஏற்ற தொழில் முறியும் ஒத்தவாறு அமைய வேண்டும். தேவைக்கு வேண்டிய பொருட்களைப் பெருக்கவும், எல்லோருக்கும் வேலை கிடைக்கும் முறையிலும், தொழில் திட்டம் உருவாக்க வேண்டும். வேலையில்லாக் குறைபாடு ஏற்படும் இடங்களில்,உள்ள வேலையை அனைவருக்கும் பங்கிடும் முறையில் வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
• தேவையிருந்தும் தொழில் செய்யத் தெரிந்திருந்தும் வேலை கிடைக்கவில்லையெனில், அத்தகைய மனிதன் குற்ற வழியில்தான் வாழ முனைவான். இது சமுதாய வளத்திர்க்கே நச்சாகும்.
• இத்தகைய கல்வி முறையால், அரசாங்கம் இன்று கல்விக்காகச் செலவலிக்கும் தொகையில் பெருமளவு குறைந்து விடும்.கல்விக்கூடமே தொழிற்சாலைகளாகவும் நேர்மையான வணிக நிலையங்களாகவும் மாற்றம் பெரும்.
• முதலில் நாட்டளவில் சமுதாயத் தலைவர்களைக் கூட்டி, இத்திட்டத்தை முன்வைத்து ஆலோசனை செய்ய வேண்டும். பிறகு, முதலில் மாவட்டத்திற்கொன்றும், பிறகு வட்டத்திற்கொன்றுமாக இந்த மாதிரிப் பள்ளிகளை அமைத்து நலம் காண வேண்டும்.
“இதுவரையில் மனிதன் அடைந்துள்ள முன்னேற்றங்களில் இறுதி பயனாக இருக்க வேண்டியது உயர்தர முறையில் குழந்தைகளை வளர்ப்பதே ஆகும்”
=அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக