வெந்தயத்தின் எண்ணற்ற மருத்துவக் குணங்கள்!
வெந்தயம் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவுதண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின்தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.
பின்வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர்குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்தநோயும் உங்களை அண்டவே அண்டாது. தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.
ஒருதேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்து, பின்மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவைஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவுகட்டுக்குள் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக