கருவிலே திருஉடையார் ஆதல்
வினா: சுவாமிஜி, "கருவிலே திருஉடையார் ஆதல்?" என்கிறார்களே அதன் பொருள் என்ன?மகரிஷியின் விடை: பதினான்கு வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் உடற்பயிற்சி, தவம் மற்றும் காயகல்பப் பயிற்சி கற்றுப் பயின்று வந்தால் வித்தில் உள்ள குறைகள் அகன்று விந்து-நாதம் தூய்மைப்படும். பிற்காலத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உடல் நலம் மற்றும் மனவளம் மிக்கதாகவும், அறிவுக் கூர்மையுடையதாகவும், ஆன்மீக எண்ணம் கொண்டதாகவும் இருக்கும். இவ்வாறு பிறக்கும் பொழுதே சான்றோனாகத் தோன்றுவதை "கருவிலே திருஉடையார் ஆதல்" என்கிறார்கள்.விவசாய, விஞ்ஞானத் துறையில் எவ்வாறு வித்து பழுதடைந்து இருந்தால் அதிலிருந்து தோன்றும் மரம் பழுதடைகிறதோ, எவ்வாறு வீரியவித்தை உபயோகித்தால் பலன் சிறப்பாக உள்ளதோ, அதே போன்ற இயற்கை நியதி இதற்கும் பொருந்தும்.
*வினா: ஐயா.ஞானியர்கள் என்பவர்கள் யார்? மகரிஷியின் விடை: நான் போய்க் கொண்டிருக்கும்பொழுது ஒருவர் வந்து இது நன்றாக இருக்கிறது. எனக்கு வேண்டும் என்று என் மேல் துண்டை இழுக்கிறார். நான் சரி என்று விட்டு விடலாம். எனக்கு அதன் மீது கடும்பற்று என்றால் நான் அதை விட மாட்டேன். அவர் என் கைகளைப் பிடித்துக் கொள்கிறார். நான் பார்ப்பேன். வேறு வழியில்லை. உடனே என் வாயால் அவர் கையை கடித்து விடுவேன். இது சந்தர்ப்பத்தால் வெளிப்படும் செயல். ஆனாலும் கருத்தொடர் மூலம் விலங்கினத்தில் இருந்து வந்ததுதான். அவ்வளவும் உள்ளே அடக்கமாக இருக்கிறது. மனிதர்கள் நல்லவர்களாக இருக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்களிடம் அடங்கியுள்ள பதிவுகள் செயலாக மாற அவர்களுக்குச் சந்தர்ப்பம் இல்லை. அதனால் அப்பதிவுகள் அடங்கி இருக்கிறது என்று அர்த்தம். ஆக எல்லோரிடமும் இருக்கும் பிறர் வளம் பறித்துண்ணும் செயலும், பிறர் உயிரை வருத்தி வாழ்தலும் அடங்கியுள்ளன. இதிலிருந்து மீண்டு வந்தால்தான் மனிதனாக வர முடியும். அத்தகையவர்கள் தான் மெய்ப்பொருள் உணர்ந்த ஞானியர்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக