திங்கள், டிசம்பர் 05, 2011

எல்லாம் வல்ல தெய்வமது---பாடல்

எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.

அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தஇடம்
அறிவு முழுமை அதுமுக்தி.
வேதாத்திரி மகரிஷி

2 கருத்துகள்:

  1. இந்த பாடலை தினமும் உணர்நது பாடி வந்தோமேயானால் மனிதன் களங்கத்திலிருந்து நிச்சயம் விடுபடுவான்.

    பதிலளிநீக்கு
  2. மெய்யுருகப் பாடினாலே போதும்
    இம்மேதினியில் எந்நாளும்
    இனிதே மேன்மையடையலாம்
    உள்ளம் உருகப்பாடு
    உள்ளே இறைவனைத் தேடு
    உடனே கிடைக்கும் வீடுபேறு

    பதிலளிநீக்கு